Posts

C1

Image
  எனது அறிமுகம்: கோ கார்த்திகேயன். 1. இளங்கலை மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர். 2. இந்தியாவின் தலை சிறந்த தொலைபேசி நிறுவனங்களில் வேலை அனுபவம். 3. வளைகுடா நாடுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை அனுபவம். 4. ஆரஞ்சு தமிழ் (தொழில்நுட்பம் &  தமிழ் சேவை) - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். 5. ஏபிசிமேட்ரிஸ் நிறுவனர், வலைத்தள கிராமிய கல்வி அமைப்பாளர். 6. மின்சார வாகனம் & வியாபார ஆலோசகர்.

L1

Image
  எழுத்தாளர் மா. சுசிலா.  சமூக சேவகர். குறிப்பாக விழி ஒளி இழந்தோருக்கான சிறப்பு சேவைகள். 15 ஆண்டுகளாக பத்திரிக்கை துறை அனுபவம். பல்வேறு உள் மற்றும் வெளி நாடுகளில் நடைபெற்ற கதை கவிதைப் போட்டிகளில் பல பரிசுகள்.  தாய்மை விருது, கண்ணகி விருது, சாதனைப்பெண் விருது போன்ற பல்வேறு விருதுகளை உடையவர்.

S13

Image
  மதிப்புறு முனைவர்.த.பொன் ரேகா D.T.Ed.,M.Com.,M.A., அரசுப் பள்ளி ஆசிரியை, திருநெல்வேலி மாவட்டம். *மாணவர்களை அறிவியல் கண்காட்சியில் ஈடுபடுத்தி ஒட்டு மொத்த முதலிடம் பெற வைத்தல். *சமுதாய விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களை எடுத்தல். *சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுதல். *500பனை விதைகளை விதைத்தல். *மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல். *COVID-19 காலத்தில் களப்பணியில் ஈடுபடுதல். *COVID-19 காலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்குதல். *கவிஞர்,பட்டிமன்ற பேச்சாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தொகுப்பாளர்,பல போட்டிகளில் நடுவர் *பெற்ற விருதுகள் : நல்லாசிரியர் மாமணி விருது,கலாம் கனவு ஆசிரியர் விருது,பாரதி கண்ட புதுமைப் பெண் விருது,குரு ரத்னா விருது,ஆசிரியர் ரத்னா விருது *உலகத் திருக்குறள் மையம் வழங்கும் சான்றோர் அறிசெம்மல் விருது,திருக்குறள் மார்கழி மாத மாமணி விருது

S12

Image
  திருமதி. முருகேஸ்வரி, சவூதி அரேபியா மாமன்னர் மருதிருவர் ஆண்ட சீமையில் பிறந்து அரேபிய மண்ணில் வசித்துக்கொண்டிருப்பவர்   கணிப்பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். ரியாத் சொல்வேந்தர் மன்றத்தின் உறுப்பினர். பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர்... தன்னுடைய கவிதை தொகுப்புகளை இரண்டு நூல்களாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். மூன்றாம் கவிதைத்தொகுப்பை அச்சிடும் பணியில் இறங்கியுள்ளார். விரைவில் அவரது மூன்றாம் தொகுப்பினை புத்தக வடிவில் காணலாம். தமிழ் மெய் நிகர் பள்ளி ரியாத் மற்றும் அபுதாபி கிளையின் நிர்வாக ஆசிரியர். சமூக சிந்தனையாளர். அரசியல் ஆர்வமுள்ளவர். பேசப்போகும் தலைப்பு - அமைச்சியல்

S11

Image
  முனைவர். இராம. சிவகுமார், சென்னை. 1. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவாக வேலூரில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் திருக்கரங்களால் சிறப்புப் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளேன். 2. சத்குருஜி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி. 3. பன்னாட்டு அமைப்பான இதய நிறைவு தியான நிறுவனத்தில் பயிற்றுனராகப் பற்பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலுள்ள அனைவருக்கும் இவவச தியானப் பயிற்சிகளை வழங்கி வருகின்றேன். 4. பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளேன். 5. பன்னாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றில்  ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்துள்ளேன்.

S10

Image
  என் பெயர் சங்கரசுப்பிரமணியன். நான் சிங்கப்பூரில், ஒரு தனியார் கப்பல் நிருவனத்தில், தீர்வுக்கட்டமைப்பு (Solution Architecture), தகவல் கட்டமைப்பு (Data Architecture)  மற்றும் மென்பொருள் ஒருங்கணைப்பின்   (Software Integration) தலமை பொருப்பு வகித்து வருகிறேன். தமிழ் பேச்சில், இங்கே உள்ள கற்றரிந்த சான்றோர் போல் அல்லன். கத்துக்குட்டி. சிங்கை நற்பணி சொல்வேந்தர் மன்ற உறுப்பினன். திருக்குறள், திருவாசகம் மற்றும் சைவ சித்தாந்த நூல்களில் ஆழக்கல்வி கற்க மிகுந்த ஆர்வம் கொண்டவன். திருக்குறளில், ஊழியல் ஒரு தனித்த சிறப்புக்கொண்ட இயல். அதன் வைப்பு முறையையும், அதை திருவளுவர் மனோதத்துவ ரீதியாகக் கையாண்டுள்ளதாகக் கருதும் என்னுடை ஒரு சில சிந்தனைகளையும் உங்கள் முன் பேச இருக்கின்றேன்.

S9

Image
  பா பிரம்மகுமார் பாலகிருஷ்ணன் 😀தலைவர் நற்பணி தமிழ்ப் பேச்சாளர் மன்றம் 😀இணை இயக்குனர், தமிழால் இணைவோம் -சிங்கப்புர் கிளை 😀மாவட்டம் T, மண்டலம் 80 பயிற்றுவிப்பாளர் 😀அணைத்துக டோஸ்மாஸ்டஸ் இயக்கத்தின் தமிழ் மொழிபெயர்புக் குழு உறுப்பினர் 😀3 முறை மேன்மை மிகு சொல்வேந்தர்